கருநெஞ்சுக்காடை (ஒலிப்பு (உதவி·தகவல்)) (rain quail or black-breasted quail (Coturnix coromandelica) என்பது காடை இனத்தைச் சேர்ந்த பறவையாகும். இப்பறவைகள் இந்திய துணைக்கண்ட பகுதியில் காணப்படுகிறது.
விளக்கம்
இதன் இறகுகள் தவிட்டு நிறத்திலும், மேற்பாகத்தில் வெளுத்த கோடுகளும், புள்ளிகளும் காணப்படும். ஆண்காடைகளுக்கு நெஞ்சிலும், அடிவயிற்றிலும் கருநிற இறகுகள் இருக்கும். இப்பறவை 6–6.5 இன்ச் (15–17 செ.மீ) நீளத்திலும், 64–71 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும்.