பச்சைக்கிளி

சிவப்பு ஆரக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி (rose-ringed parakeet (Psittacula krameri) என்பது ஒருவகைக் கிளி ஆகும். இலங்கையில் பேச்சு வழக்கில் இது பயற்றங்கிளி என அழைக்கப்படுகிறது.


விளக்கம்


இக்கிளிகளின் வால் நீண்டு கூர்மையாக முடிகிறது. பச்சை நிறத்துடன், வளைந்து சிவந்த அலகும், கருப்பு இளஞ்சிவப்பு கலந்த கழுத்து வளையம் போன்ற ஆரம் உடையது. இவ்வின பெண்கிளி எல்லாவகையிலும் ஆண்கிளி போல இருந்தாலும் இந்த ஆர வளையம் இல்லாமல் இருக்கும். இப்பறவைகள் கூண்டுகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் மனிதர்கள் சொல்லும் சொற்களைக் கேட்டு அவற்றைத் திரும்பச் சொல்லக்கூடியவை. இவற்றை வைத்து சர்க்கசில் வேடிக்கைக் காட்டுவார்கள்.


வெளி இணைப்புகள்

பச்சைக்கிளி – விக்கிப்பீடியா

Rose-ringed parakeet – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.