மாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு (ruby-topaz hummingbird, Chrysolampis mosquitus) என்பது சிறிய அண்டிலிசு பகுதி உட்பட வெப்ப வலய தென் அமெரிக்கா முதல் கொலொம்பியா, வெனிசுவேலா, பிரேசில், வட பொலிவியா, தென் பனாமா ஆகிய இடங்களில் இனப் பெருக்கம் செய்யயும் ஒரு சிறிய பறவை ஆகும்.
இது கிரிஸ்சோலம்பிஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரே ஒரு பறவை இனமாகும். இது பருவகால வலசை போதல் தன்மை உடையதாயினும், அதனுடைய நகர்வு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.