ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி

ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி (Scarlet Macaw, Ara macao) என்பது பஞ்ச வண்ணக்கிளி குழுவிலுள்ள பெரியதும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்கள் கொண்ட தென் அமெரிக்க கிளியாகும். இது தென் அமெரிக்க வெப்பமண்டல ஈரஞ்செறிந்த பசுமையான காடுகளைத் தாயகமாகக் கொண்டது. தென் கிழக்கு மெக்சிக்கோ முதல் அமேசான் மழைக்காடுகளைக் கொண்ட பெரு, பொலிவியா, வெனிசுலா, பிரேசில் ஆகிய நாடுகளின் தாழ் நிலங்களில் 500 m (1,640 ft) முதல் 1,000 m (3,281 ft) வரையான உயரமுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. இது உள்ளூர் அழித்தல் முதல் வாழ்விட அழிப்பு மற்றும் கிளி வர்த்தகத்திற்காக பிடித்தல் வரையான காரணங்களினால் துன்பத்திற்குள்ளாகின்றன. இது ஹொண்டுராஸ் நாட்டின் தேசியப் பறவையாகும்.


வெளி இணைப்புகள்

ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி – விக்கிப்பீடியா

Scarlet macaw – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *