சுண்டாங் கோழி

சுண்டாங் கோழி உருவ அமைப்பு


ஆங்கிலப்பெயர் : Red spurfowl


அறிவியல் பெயர் : Galloperdix spadiceaஉடலமைப்பு


36 செ.மீ. – கருஞ்சிவப்புத் தோய்ந்த பழுப்பு நிற உடலில் கருப்பும் சிவப்புமான கீற்றுகளையும் சாம்பல் பழுப்பு நிற நெளிகோடுகளையும் கொண்டது. ஆணின் கால்களில் முள் முனைகள் உண்டு. பெண்ணின் உடல் கருஞ்சிவப்புத் தோய்ந்த மணல் நிறமானது.


காணப்படும் பகுதிகள்


தெற்கு. கிழக்கு மாவட்டங்கள் நீங்கலாகத் தமிழ்நாடு முழுவதும் மலை அடிவாரங்களில் மூங்கில் காடுகள், லாண்டானா புதர்கள் ஆகியறவ்றைச் சார்ந்து காணப்படும்.


உணவு


மேற்கண்ட பகுதிகளில் மறைந்து திரிந்தபடி புல் விதைகள், சிறு கனிகள், புழு பூச்சிகள், கறையான் ஆகியவற்றைத் தேடித் தின்னும். ஆளரவம் கேட்டவுடன் கால்களின் மேல் நம்பிக்கை வைத்துத் தப்பி ஓட முயலுமேயன்றி இறக்கைகளை நம்பிப் பறந்து செல்ல முயற்சிப்பதில்லை. ஒரே வட்டாரத்தைத் தனக்கு உரியதாக்கிக் கொண்டு அங்கேயே சுற்றிக் சுற்றி வரும்.


இனப்பெருக்கம்


கொக் கொக் கொக் கொக்கோ கத்தும், ஜனவரி முதல் ஜீன் முடிய மூங்கில் புதர்களிடையெ தரையில் சிறு குழியில் 3 முதல் 5 முட்டைகள் இடும்.


வெளி இணைப்புகள்

சுண்டாங் கோழி – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published.