மஞ்சள்கொண்டை கிளி

மஞ்சள்கொண்டை கிளி (Sulphur-crested cockatoo) இது கொண்டைக்கிளி வகையில் கிளி இனத்தைச் சார்ந்த பறவையாகும். இவை ஆத்திரேலியா கண்டத்தில் அமைந்துள்ள நியூ கினி தீவுககள், சொலமன் தீவுகள் மேலும், பிலிப்பீன்சு போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவை அந்நாட்டில் மிகுதியாகவும், ஒருசில நேரத்தில் மனிதர்களுக்கு தீங்கானது எனவும் கருதப்படுகிறது. இவை கிளிகளைப்போல் மிகவும் அறிவார்ந்த பறவையாகம், பரவலாக வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பறவையாகவும் உள்ளது. இப்பறவை மற்ர கிளிகளைப் போலவே தன்து கூட்டிற்காக போட்டிபோடும் தன்மை கொண்டதாக உள்ளது. இரண்டு முதல் மூன்று குட்டைகள் வரை இட்டு 25 முதல் 27 நாட்கள் வரை அடைகாக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியக் கிளி இனமான இவற்றைப் போல் 25 வகையான கிளிகள் சட்டத்திற்குப் புறம்பாக இந்திய சந்தையில் விற்கப்படுகின்றன.


வெளி இணைப்புகள்

மஞ்சள்கொண்டை கிளி – விக்கிப்பீடியா

Sulphur-crested cockatoo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.