வாள் அலகு ஓசனிச்சிட்டு (sword-billed hummingbird, Ensifera ensifera) என்பது தென் அமெரிக்காவில் காணபபடும் ஓர் ஓசனிச்சிட்டு இனமாகும். இவை உயர் நில அமைப்பில் (2500 மீட்டருக்கு மேல்) பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர், பெரு, வெனிசுவேலா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
விபரம்
ஓசனிச்சிட்டு பறவைகளில் அதன் உடலைவிட நீளமான அலகைக் கொண்டு காணப்படும் ஒரே பறவை இனமாக இது காணப்படுகின்றது. இதன் மூலம் நீளமான பூவிதழ் உடைய பூக்களில் உணவை உட்கொள்ள இதனால் முடிகிறது. ஆகவே இதனுடைய நாக்கும் நீண்டு காணப்படுகின்றது.