செங்குயில்

செங்குயில் இந்திய துணைகண்டத்திலும் தென் ஆசியாவிலும் காணப்படும் ஒரு சிறிய வகை குயிலினமாகும்.


பெயர்கள்


தமிழில் :செங்குயில்


ஆங்கிலப்பெயர் :Banded Bay Cuckoo


அறிவியல் பெயர் :Cacomantis sonnerattii


உடலமைப்பு


24 செ.மீ. – செம்பழுப்பான உடலில் பழுப்புநிறக் குறுக்குக் கோடுகளைக் கொண்ட இதன் உடலில் அடிப்பாகம் வெண்மையான பழுப்புக் குறுக்குக் கோடுகள் கொண்டது. வெளிர் செம்பழுப்பான வாலில் வெள்ளையும் கருப்புமான திட்டுக்கள் இதனை அடையாளங் காண உதவும்.


காணப்படும் பகுதிகள்


அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகள், தோப்புகள், இலையுதிர்க்காடுகள், விளைநிலங்களை அடுத்த தோட்டங்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே காணலாம். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களிலேயே சிறப்பாகக் காணப்படும்.


உணவு


இது உயரமரக் கிளைகளில் கம்பளிப்பூச்சசி, வண்டு ஆகியனவற்றை இரையாகத் தேடித்திரிவது, குளிர்காலத்தில் மௌனம் சாதிப்பதால் இதன் இருப்பைக் கண்டுகொள்வது கடினம். கோடையில் வீஃடி. டீ…டி எனத் தொடங்கும் குரல் கொடுப்பதைக் காலை மாலைகளில் கேட்கலாம். மேக மூட்டமான நாட்களில் பகல்முழுவதும் குரல் கொடுத்தபடி இருக்கம்.


இனப்பெருக்கம்


பிப்ரவரி முதல் ஆகஸ்ட் முடிய கொண்டைக் கருவி மஞ்சள் சிட்டு, சிலம்பன் முதலிய பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தில் அவற்றின் கூடுகளில் முட்டையிட்டுச் செல்லும்.

வெளி இணைப்புகள்

செங்குயில் – விக்கிப்பீடியா

Banded bay cuckoo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.