கருந்தலைக் குயில் கீச்சான்

இந்த கருந்தலை குயில் கீச்சான் இந்திய துணை கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் சிற்றினம் ஆகும்.


பெயர்கள்


தமிழில் : கருந்தலை குயில் கீச்சான்


ஆங்கிலத்தில் : Black-headed cuckooshrike


அறிவியல் பெயர் :Coracina melanoptera


உடலமைப்பு


19 செ . மீ – இதன் தலை முழுவதும் நல்ல கருப்பாகவும் உடல் கருஞ்சாம்பல் நிறமாகவும் இருக்கும். வால் கருப்பாக வெள்ளை முனையுடன் கூடியது.


காணப்படும் பகுதிகள் & உணவு


தனியாகவும் சில நேரங்களில் கூட்டாமாகவும் காணப்படும் மின் சிட்டு. காட்டுக் கீச்சான், வால்காக்கை ஆகிய இரை தேடும் குழுக்களில் ஒன்றாக இரைதேடும். .புழு பூச்சிகல் சிறு பழங்களையும் உணவாகக்கொள்ளும். பிட்-பிட்-பிட் எனவும் டுவிட்-டுவிட் எனவும் முடியும் சீழ்க்கைக் குரலில் ஆண் பறவை குரல் கொடுக்கும். பெண் இது போலத் தொடர்ந்து குரல் கொடுக்காது ஒரு முறை மட்டும் குரல் கொடுக்கும்.


இனப்பெருக்கம்


ஏப்ரல் முதல் சூன் வரை உலர்ந்த புல்லைச் சிலந்தி நூலால் இணைத்து 8 செ.மீ குறுக்களவிலான கோப்பை வடிவிலான கூட்டினை மரங்களில் கவட்டியில் இரண்டு முதல் எட்டு மீட்டர் உயரத்தில் அமைத்து 3 முட்டைகள் இடும்.


வெளி இணைப்புகள்

கருந்தலைக் குயில் கீச்சான் – விக்கிப்பீடியா

Black-headed cuckooshrike – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.