செவ்விறகுக் கொண்டைக் குயில் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும், இது கண்ணாடி போன்ற மேற்புற உடலமைப்பை கொண்டது.
பெயர்கள்
தமிழில் :செவ்விறகுக் கொண்டைக் குயில்
ஆங்கிலப்பெயர் :Red-winged Crested Cuckoo
அறிவியல் பெயர் :Clamator coromandus
உடலமைப்பு
47 செ.மீ. – சுடலைக் குயிலினைப் போன்ற தோற்றம் உடைய இதன் இறக்கைகள் செம்பகத்தின் இறக்கைகளைப் போலச் செம்பழுப்பு நிறமானது. முதுகு பளபளப்பான கருப்பு, மோவாய், தொண்டை, மேல்மார்பு ஆகியன துருச் சிவப்பு: கீழ் மார்பும், வயிறு வெண்மை.
காணப்படும் பகுதிகள்
குளிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வலசை வருவது. கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் வழியாக இலங்கைக்கு வலசை போகும் இதனைக் கோடிக்கரையில் கண்டதான குறிப்பு உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் காணப்பட்ட குறிப்பும் உள்ளது. இங்கு வலசை வரும்போது மௌனம் காப்பது இதன் வருகை மற்றும் காணப்படும் இடங்கள் ஆகியன பற்றிய முழுவிவரங்களும் முறையாகத் தொகுக்கப்படவில்லை.
உணவு
தனித்தும் சிறு குழுவாகவும் உயர்மரக் கிளைகளிடையே காணப்படும். கம்பளிப் பூச்சிகளைத் தேடி உணவாகக் கொள்ளும் இது தரைக்கு வருவதில்லை.