செக் தங்க பழுப்புப்புள்ளி கோழி (Czech Gold Brindled Hen)(செக் மொழி: Česká slepice zlatě kropenatá), என்பது போஹேமியாவில் தோன்றிய கோழியினமாகும். இக்கோழி குறித்த முதல் குறிப்பு 1205ஆம் ஆண்டு முதல் கிடைக்கின்றன. டென்மார்க்கின் வால்டெமர் II, செக் இளவரசியான போஹேமியாவின் டாக்மருடன் திருமணம் செய்துகொண்ட போது இக்கோழி மந்தை ஒன்று திருமணப் பரிசாக வழங்கப்பட்டது. இப்போது இது அழிவிற்குள்ளான இனமாக உள்ளது.
விளக்கம்
இக்கோழிகள் பெரும்பாலும் தங்க நிறத்தில் மட்டுமே காணப்படும். சேவலின் கழுத்தில் தங்க இறகுகள் இருக்கும். பின்புறத்தில் உள்ள இறகுகள் பழுப்பு முதல் தங்க-சிவப்பு நிறமாக இருக்கும். இறக்கையில் உள்ள இறகுகள் பச்சை கண்ணாடியுடன் பழுப்பு நிறத்தில் உள்ளன. வால் கருப்பு நிறமுடையது. மார்பகமானது கருப்புடன் கத்திரி தங்க நிறப் புள்ளிகளை உடையது. அலகானது மஞ்சள் முனையுடன் ஸ்லேட் முதல் அடர் பழுப்பு நிறத்துடன் இருக்கும். கோழிகள் முற்றிலும் வெளிர் பழுப்பு தங்கம் புள்ளிகளுடையன. தலையில் ஒற்றை சிவப்பு சீப்பு உள்ளது. கால்கள் ஸ்லேட் நீல நிறமுடையன. கோழிகள் 55-60 கிராம் எடையுடைய முட்டைகளை ஆண்டு ஒன்றுக்கு 160 முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. குஞ்சுகள் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.