கரிச்சான் குயில்

பெயர்கள்


தமிழில் : கரிச்சான் குயில் (ஒலிப்பு (உதவி·தகவல்))


ஆங்கிலத்தில் : Drongo Cuckoo , Fork-tailed drongo-cuckoo


அறிவியல் பெயர் : Surniculus dicruroides


உடலமைப்பு


25 செ.மீ. – தோற்றத்தில் கரிச்சானை முழுதும் ஒத்ததான இதனை வாலடியின் ஓர வால்இறகுகளில் காணப்படும் வெண்கோடுகள் கொண்டு மட்டுமே வேறுபடுத்தி அறிய முடியும். முழு வளார்ச்சி பெறும் முன் படத்தில் உள்ளது போன்று வெண்புள்ளிகள் கொண்ட தோற்றம் தரும்.


காணப்படும் பகுதிகள்


தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை சார்ந்த வட்டாரங்கள் நீங்கலாக மற்ற பகுதிகளில் மரங்கள் நிறைந்த காடுகளில் தனித்து மங்களின் உயரகிளைகளில் கம்பளிப் பூச்சி முதலிய மென்மையான உடல் கொண்ட பூச்சிகளை இரையாகத் தேடித் தின்பதோடு அத்தி முதலிய பழவகைகளையும் உணவாகக் கொள்ளும் குளிர் காலத்தில் கோடையில் குரல் கொடுப்பதுபோல குரல்கொடுக்காது மௌனம் காப்பதால் இதனைக் கரிச்சானில் வேறுபடுத்தி அறிவது கடினம்.


குரலொலி


சிலபோது இறக்கைகளை உயர்த்தியபடி அக்கா குயிலின் முதல் இரண்டு மூன்று சுருதி குறைந்த குரலைப் போலப் குரல்கொடுப்பதும் உண்டு.பீஇ பீஇ பீஇ பீஇ என ஆறேழு முறைதொடார்ந்து கத்தும் குரலொலி கொண்டு இதன் இருப்பை அறியலாம்.


இனப்பெருக்கம்


மார்ச் முதல் அக்டோபர் முடிய கரிச்சான், சிலம்பன் ஆகிய பறவைகளின் கூடுகளில் முட்டையிட்டுச் செல்லும்.


வெளி இணைப்புகள்

கரிச்சான் குயில் – விக்கிப்பீடியா

Fork-tailed drongo-cuckoo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.