கிராம்பிரியா (Gramapriya) என்பது ஒரு இந்திய கோழி இனமாகும். இது ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட கோழிப்பண்ணை இயக்குநரக திட்டத்தால் உருவாக்கப்பட்டது . இந்த கிராம்ப்பிரியா கோழி தன் 175 நாள் வயதில் முட்டையிடத் துவங்குகிறது. 72 வாரங்களில் 200–225 முட்டைகள் வரை இடும்.
கிராமப்பிரியா கோழி இந்திய அரசால் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஐதராபாத்தைச் சார்ந்த திட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின கோழி ஆகும். கிராம்ப்பிரியா கோழிகள் கொல்லைப்புற வளர்ப்புக்காக உருவாக்கப்பட்டவை. இவை இந்திய விவசாயிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பைக் கொண்டவையாக உள்ளன.
கிராம்ப்பிரியா கோழி இறைச்சி தந்தூரி வகை உணவுகளை தயாரிக்க மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
கிராமப்பிரியாவில் இரண்டு வகைகள் உள்ளன: