சாம்பல் கீச்சான் (great grey shrike) என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஊணுன்னி பறவையாகும். இதை சாம்பல் பருந்து குருவி என்றும் அழைப்பர்.
விளக்கம்
இப்பறவை மைனாவின் பருமனும், வெள்ளிபோல ஒளிரும் சாம்பல் நிறமும் கொண்டதாக இருக்கும். இதன் வாலில் வெள்ளையும், கருப்பும் பட்டைகள் மாறி மாறி இருக்கும். அலகில் இருந்து கண்வழியாக கருங்கோடு ஒடும், பெரிய தலையும் வளைந்த அலகும் கொண்டிருக்கும். இதன் உணவு வெட்டுகிளி போன்ற பெரிய பூச்சிகளும், சுண்டெலிகள், பல்லிகள் போன்ற உயிரினங்களும் ஆகும்.