வெண் கொக்கு (intermediate egret, median egret, smaller egret, yellow-billed egret ) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். இப்பறவைகள் கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியத் துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
இக்கொக்குகள் பெருங் கொக்குகள் மற்றும் சிறிய வெள்ளை கொக்குகளுக்கு இடையிலான அளவில் இருக்கும். இப்பறவை உண்ணிக்கொக்கு அளவை ஒத்து இருக்கும். இப்பறவையின் நீளம் 105-115 செ.மீ (41-45 இன்ச்), சிறகுகள் விரிந்த நிலையில் 56-72 செமீ (22-28 இன்ச்) அளவிலும் எடை 400 கிராம் (14 அவுன்ஸ்) ஆகும். இப்றவையின் இறகுகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும்.