சுடலைக் குயில் அல்லது கொண்டைக் குயில் (Jacobin Cuckoo or Pied Cuckoo – Clamator jacobinus) ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் குயிலினப் பறவை. பருவமழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வண்ணம் இப்பறவையின் வருகை இருப்பதாக இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளது. இதில் ஓரளவே உண்மை இருப்பதாக மைகிரண்ட் வாச்சின் ஆய்வின் மூலம் அறியப்படுகிறது . இந்தியப் பழங்கதையியலில் இது சாதகப் பறவை எனவும் அறியப்படுகிறது. தொன்மங்களில் இப்பறவை மழை நீரை மட்டும் அருந்தும் என்றும், அதற்காக மேகத்தை நோக்கி வாயைத் திறந்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பறவையாது தவிட்டுக் குருவி போன்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடக் கூடியது.
உடல் தோற்ற விளக்கம்/கள அடையாளங்கள்
சுடலைக் குயில் 13 inch அல்லது 31 cm – 33 cm நீளமுள்ளது; அதன் மேலுடல் சிறகுத்தொகுதி (தலை, கொண்டை உள்பட) கருப்பாக (சற்றே மினுமினுக்கும் பச்சை நிறங்கலந்து) இருக்கும்.
பறத்தலுக்குதவும் சிறகுகள் கரும்பழுப்பாகவும் அதன் ஊடே அகன்ற வெண்பட்டையுடனிருக்கும்; நீண்ட வாலில் (18 cm) வெண்ணிற முனைகள் காணப்படும். அடியுடல் வெண்மையாகவிருக்கும்.
அலகு கருப்பாகவும் கால் சற்றே நீலமாகவும் இருக்கும்.
பரவல்
ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியாவில் சமவெளிப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் (8000 அடி உயரத்திலும் கூட) காணப்படும்.
இந்தியாவில் காணப்படும் இரு உள்ளினங்கள்
Clamator jacobinus என்ற உள்ளினமானது பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது; இது உள்ளூர்ப் பறவையாகும்.
Clamator jacobinus pica என அழைக்கப்படும் உள்ளினம் இந்தியாவின் பிறவிடங்களில் வெயில் காலங்களில் இடம்பெயர்ந்து வலசையாக வரும் பறவையாகும்; இது உள்ளூர் சுடலைக் குயிலை விட சற்று பெரியது. மேலும் இது ஆப்பிரிக்காவிலிருந்து வரலாம் என்று கருதப்படுகிறது.
வெளி இணைப்புகள்
சுடலைக் குயில் – விக்கிப்பீடியா
Jacobin cuckoo – Wikipedia