காட்டுக் கோழி

காட்டுக் கோழி (Junglefowl) என்பது காடுகளில் வாழும் கோழி இனப் பறவையாகும். இவை இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெரிய பறவைகளாகவும், வண்ணமயமான இறகுகளைக் கொண்டு இருக்கும்.


பல பறவைகள்போல இவற்றில் ஆண்பறவைகளான சேவல்கள் முட்டைகளை அடைக்காப்பதில் பங்குவகிப்பதில்லை. பெண் பறவைகளான கோழிகளே இந்தப் பணிகளை செய்கின்றன இந்தக் கோழிகள் உருமறைப்பை செய்யக்கூடியன.


காட்டுக் கோழிகளின் உணவு விதைகள் என்றாலும் இவை பூச்சிகளையும் உண்ணக்கூடியன குறிப்பாக இதன் குஞ்சுகளுக்கு உணவாகத் தரும்.


காட்டுக் கோழிகளில் ஒரு இனமான சிவப்புக் காட்டுக்கோழி தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என்று கருதப்படுகிறது. என்றாலும் வீட்டுக் கோழிகளின் மூதாதையாக சிலர் வெள்ளைக் கானாங்கோழிதான் எனக் கருதுவோரும் உள்ளனர்..


இலங்கைக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப்பறவையாக உள்ளது.


இனங்கள்


 • சிவப்புக் காட்டுக்கோழி, Gallus gallus

 • இலங்கை காட்டுக்கோழி, Gallus lafayettii

 • வெள்ளை கானாங்கோழி, Gallus sonneratii

 • பச்சைக் காட்டுக்கோழி, Gallus varius

 • காலஸ் பேரினம் யூரேசியா முழுக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உருவானது என்று தோன்றுகிறது.


  வெளி இணைப்புகள்

  காட்டுக்கோழி – விக்கிப்பீடியா

  Junglefowl – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.