செம்முதுகு கீச்சான் அல்லது செம்முதுகுப் பருந்துக் குருவி என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பூச்சிகளையும், சுண்டெலிகளையும் வேட்டையாடும் ஒரு பறவையாகும்.
விளக்கம்
இப்பறவை சாம்பல் கீச்சானைவிட சற்று சிறியது. இதன் முதுகும், பிட்டமும் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். நெஞ்சு, வயிறு போன்றவை மங்கிய சிவப்பு நிறத்தில் காணப்படும். இப்பறவை அடர்ந்த காடுகளையும், நீர் நிலைகளையும் விரும்பக்கூடியது.
வெளி இணைப்புகள்
செம்முதுகு கீச்சான் – விக்கிப்பீடியா