மைக், தலையில்லாத கோழி (ஏப்ரல் 1945 – மார்ச்சு 1947), என்பது அதிசய மைக், ஒரு Wyandotte வகை கோழியாகும். இது தலை துண்டிக்கப்பட்டபின்னரும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தது. இதன் உரிமையாளர் இந்த அதிசயத்தை நிரூபிக்க உத்தாக் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றார்.
தலை துண்டிப்பு
செப்டம்பர் 10, 1945, அன்று லில்யாட் ஒல்சன் என்ற விவசாயியின் வீட்டிற்கு அவரது மாமியார் வந்திருந்தார். இரவு உணவுக்காக அவரது மனைவி அவரை தோட்டத்துக்கு அனுப்பி ஒரு கோழியைப் பிடித்து வரச்சொன்னார். ஒல்சன் 5 1/2 மாத மைக் என்னும் சேவலைப் பிடித்து கோடாரியால் வெட்டினார். வெட்டும்போது பெரும்பாலான மூளைச்செல்கள் செயலிழந்தன. ஆனால் கழுத்து சிரை சேதமடையவில்லை.
கழுத்தை வெட்டிய பின்னரும் மைக் நின்றுகொண்டே இருந்தது. அதனால் நடக்க முடிந்தது. உணவைத் தேடியது. கூவியது.
மைக் சாகாததால் அதைப் பாராமரிக்க ஒல்சன் முடிவெடுத்தார். தண்ணீருடன் பாலையும், சிறு சிறு உணவு தானியங்களையும் கொடுத்தார்.
புகழ்
மைக்கின் புகழ் நாடெங்கும் பரவியது. ஒல்சன் பல இடங்களுக்கு காட்சிக்கு மைக்கை கூட்டிச் சென்றார். புகழ்பெற்ற “டைம்” மற்றும் “லைப்” பத்திரிக்கைகளுக்காக படம்பிடிக்கப்பட்டார்.
மைக்கை பார்க்க 25 சென்ட் வசூக்கப்பட்டது. அதன் மூலம் மாதம் 4500 (மே, 2015ல் 47,500)அமெரிக்க டாலர்களை சம்பாதித்தார் ஒல்சன். சேவலின் மதிப்பு 10,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.
இறப்பு
மார்ச்சு, 1947ல் ஒல்சன் ஃபீனிக்சில் உள்ள ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் தங்கியிருந்தார். மைக்கிற்கு உணவு கொடுக்கும் சாதகங்களை அவர் காட்சிக்கூடத்தில் மறந்துவிட்டிருந்தார். உணவு கொடுக்கமுடியாததால் மைக் இறந்தது.
பிரேத பரிசோதனை
கழுத்து சிரை பாதிப்படையவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையில் இருந்த ஒரு கட்டி இரத்தப்போக்கை தடுத்திருந்தது. பெரும்பகுதி மூளையுடன் இருந்தது. அடிப்படை வேலைகளைச் செய்ய உதவும் மூளைப்பகுதி பாதிப்படையவில்லை.