கருப்பு மைனார்க்கா கோழி (Minorca,காட்டலான்: Gallina de Menorca, எசுப்பானியம்: Menorquina) என்பது ஒரு வளர்ப்பு கோழி இனமாகும். இது ஸ்பெயினின் தென் கிழக்கே நடுநிலக் கடல் பகுதியில் உள்ள மைனாக்கா தீவைப் பிறப்பிடமாக கொண்ட கோழி இனமாகும். இது உலகின் பல நாடுகளில் நன்கு அறியப்பட்ட ஒரு காட்சிப் பறவை ஆகும். ஆனால் மைனார்கா தீவில் இந்த கோழி அரியவகை இனமாக, அருகிவரும் ஆபத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.
விளக்கம்
கருப்பு மைனாக்கா கோழிகள் உடல் முழுவதும் கரு நிறத்தில் மினுமினுப்புள்ள இறகுகள் கொண்டிருக்கும். இதில் பல வகைகள் உண்டு முழுவதும் கருப்பு நிறமில்லாமல் வேறு நிறம் கலந்த இறகுகளை உடைய கோழிகளும் உண்டு. இக் கோழிகளின் கால்கள் கனத்து, குறுகியதாக இருக்கும். இதன் கொண்டை சிவப்பாக இருக்கும். இக்கோழிகள் கனத்து வலிவுடன் இருக்கும். இவை முட்டைத் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 130 க்கும் மேற்பட்ட முட்டைகளை இடக்கூடியன.