பூங்குயில்கள் எனப்படுபவை குயிற் குடும்பத்தில் உள்ள பூங்குயிற் பேரினத்தைச் சேர்ந்த பெரிய பறவைகளாகும். இவை ஆசியாவின் அயன மண்டலப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பூங்குயிற் பேரினத்துக்கான உயிரியற் பெயர் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான ஃபொயினிக்கோஃபேயசு, அதாவது கடுஞ் சிவப்புக் கண்கள் என்பதிலிருந்து பெறப்பட்டது. இப்பெயர் செம்முகப் பூங்குயிலின் உருவத்திலிருந்தே பெறப்பட்டுள்ளது.
பூங்குயிலினங்கள்
பெயரீட்டு வரிசையின் அடிப்படையிற் பூங்குயிலினங்கள் பின்வருமாறு:
தீங்குயில் (Rhinortha) என்பது தனிவகை தீங்குயிலினம் என்னும் வகையைச் சேர்ந்ததெனினும், பூங்குயில்களுடன் உள்ள மிக நெருங்கிய தொடர்பு கொண்டதாக நெடுங்காலமாகக் கருதப்பட்டதன் காரணமாக முன்னர் செம்பகப் பூங்குயில் (“P.” chlorophaeus) எனப் பெயரிடப்பட்டிருந்தது. எனினும், அது பூங்குயில்களிலிருந்து மிகவும் வேறுபட்ட தனியினமாகும்.