பெருவால் எழிற்புள் பறவை

பெருவால் எழிற்புள் எனப்படுவது சந்திரவாசி பறவைக் குடும்பத்தில் எழிற்புள் பேரினத்தில் பேரெழிற்புள் (Astrapia stephaniae) மற்றும் நாடாவால் எழிற்புள் (Astrapia mayeri) என்பவற்றின் கலப்பினமான பறவையாகும்.


தோற்றம்


பெருவால் எழிற்புள் பறவையானது நாடாவால் எழிற்புள் இனத்தை நெருங்கியதாகக் காணப்படினும், உண்மையில் தன் இரு பெற்றார் இனங்களையும் ஒத்திருக்கும். இதன் ஆண் பறவைகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங் கொண்ட நீளமான இரு வாலிறகுகளையும் கூந்தல் போன்ற நீல நிறத் தலை மற்றும் கழுத்தையும், சிறிய சொண்டையும் கரிய உடலையும் கொண்டிருக்கும். இதன் பெண் பறவையோ தன் தலையில் ஆண் பறவையை விடக் குறைவான அளவு நீல இறகுகளையும் ஒப்பீட்டளவிற் சிறிய வாலையும் கொண்டிருக்கும்.


வரலாறு


1930 வரையில், பெருவால் எழிற்புள் (மற்றும் ஏனைய கலப்பினச் சந்திரவாசிப் பறவையினங்கள்) தனித்த இனங்களாகவே கருதப்பட்டுத் தனியான பெயரிடப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில், பெருவால் எழிற்புள் Astrarchia barnesi என்று அறிவியற் பெயர் வழங்கப்பட்டிருந்தது.


பரவல்


பெருவால் எழிற்புள்ளானது பப்புவா நியூ கினி நாட்டின் ஃகாகன் மலைத்தொடர் மற்றும் கிலுவே மலை என்பவற்றில், கடல் மட்டத்துக்கு மேலே 2400 மீ – 2600 மீ உயரமான பகுதிகளிற் காணப்படுகிறது.


வெளி இணைப்புகள்

பெருவால் எழிற்புள் – விக்கிப்பீடியா

Barnes’s astrapia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.