பொன்முதுகு மரங்கொத்தி

பொன்முதுகு மரங்கொத்தி (Black-rumped flameback, lesser golden-backed woodpecker, Dinopium benghalense) இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் பறவை. மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. நகர்ப்புறங்களில் காணப்படும் ஒரு சில மரங்கொத்திகளில் இது ஒன்று. தனித்துவமான ஓசையெழுப்பும் இப்பறவை அசைந்து அசைந்து பறக்கும் தன்மையுடைது. கருப்பு நிற கழுத்தும், பிட்டமும் கொண்டது.


மரங்களில் செங்குத்தாக ஏறும் தகவமைப்பைப் பெற்றுள்ள ஒரே பறவை இதுவாகும். இப்பறவை பட்டுப்போன் மரங்களில் இருந்து பூச்சிகளை பிடித்து உண்ண பின் இருக்கும் பொந்துகளில்தான் கிளி, மைனா போன்ற பறவைகள் கூடுகட்டி வாழும்.


உடலமைப்பு


29 செ.மீ- பொன்நிறமான உடலைக் கொண்ட இதன் மாh;பும் வயிறும் வெண்மையானது. கருப்புக் கீற்றுகள் கொண்டது. நெற்றியும் தொண்டையும் குங்குமச் சிவப்பு; பறக்கும்போது பின் முதுகும் பிட்டமும் கருப்புநிறமாக இருப்பதிலிருந்து குங்குமச் சிவப்புக் கொண்ட பின் முதுகும் பிட்டமும் கொண்ட முந்தைய மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தியிலிருந்து இதனை வேறுபடுத்தி அறியலாம்.


காணப்படும் பகுதிகள் ,உணவு


தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் மரங்கொத்தி இது ஒன்றே. வறள் காடுகள், இலையுதிர் காடுகள் மா முதலிய பழமரங்கள் நிறைந்த சிற்றூர் தோப்புகள் விளைநிலங்கள், சாலை ஓர மரங்கள், தென்னை, பனை மரங்கள் வளர்ந்துள்ள இடங்கள் ஆகியவற்றைச் சார்ந்து திரிவது. பூச்சி புழுக்களைத் தின்னும் பிற பறவைகளோடு மரத்துக்கு மரம் தாவிப்பறந்து மேல்நோக்கித் தொத்தி ஏறியபடி சுற்றிச் சுற்றி வந்து இரை தேடும். அலைபோல் எழுந்தும் தாழ்ந்தும் பறக்கும். இது பறக்கும் போது கிறீச்சிட்டு சிரிப்பது போலக் கத்தும். தரையிலும் இறங்கி எறும்பு முதலியவற்றைத் தின்னும். பழங்கள், மலர்த்தேன் ஆகியவற்றைத் தேடி விரும்பி உண்ணும்.


இனப்பெருக்கம்


பிப்ரவரி முதல் ஜுலை முடிய மா, வாகை, முருங்கு ஆகிய மரங்களில் வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும்.


வெளி இணைப்புகள்

பொன்முதுகு மரங்கொத்தி – விக்கிப்பீடியா

Black-rumped flameback – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.