நீல அழகி (blue jay, Cyanocitta cristata) என்பது கோர்விடே குடும்பத்தைச் சேர்ந்த, தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட ஒரு பசரின் பறவையாகும்.
விபரம்
நீல அழகி அலகு முதல் வால் வரை 22–30 cm (9–12 in) நீளமுள்ளதும் 70–100 g (2.5–3.5 oz) நிறையுள்ளதும் இறக்கை விரிப்பு அளவு 34–43 cm (13–17 in) கொண்டுமுள்ளது. கனெடிகட் பகுதியில் உள்ளது கிட்டத்தட்ட 92.4 g (3.26 oz) நிறையும், தென் புளோரிடா பகுதியில் உள்ளது கிட்டத்தட்ட 73.7 g (2.60 oz) நிறையும் உள்ளது. அதன் தலையில் முடி அமைப்பு காணப்படும். பறவையின் மனநிலைக்கு ஏற்ற அது உயர்ந்தோ தாழ்ந்தோ காணப்படும். இது கோபமாக இருக்கும்போது முடி உயர்ந்தும், பயமாக இருக்கும்போது, சிலிர்த்துக் கொண்டும் இருக்கும். மற்றப் பறவைகளுடன் சேர்ந்து உண்ணும்போது அல்லது ஓய்வாக இருக்கும்போது தலையுடன் முடி அமர்ந்து காணப்படும்.