தாமிர இறக்கை இலைக்கோழி

தாமிர இறக்கை இலைக்கோழி (Bronze-winged jacana, Metopidius indicus) அல்லது தாமரை இலைக்கோழி) என்பது இலைக்கோழி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை இந்தியா, தென்கிழக்காசியா, தெற்கு சீனா, தெற்கு சுமத்ரா, மேற்கு ஜாவா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.


தோற்றம்


பொதுவாகப் பார்த்தால் இது நீலத் தாழைக்கோழி போல காணப்படுகிறது. கௌதாரியின் அளவு உள்ளது. இதன் தலை, கழுத்து, மார்பு ஆகியன மினுமினுக்கும் கறுப்பு நிறமுடையதாகவும், இறகுகளும், முதுகும் தாமிர நிறத்தில் இருக்கும்.


கள இயல்புகள்


இலைக்கோழிகளுக்கு உரிய தாமரையிலையின் மீது நடக்கும் இயல்பு இதற்கும் உண்டு.


வெளி இணைப்புகள்

தாமிர இறக்கை இலைக்கோழி – விக்கிப்பீடியா

Bronze-winged jacana – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.