ஆனைச்சாத்தன் பறவை

ஆனைச்சாத்தன் என்பது பறவை இனங்களில் ஒன்று. இந்தப் பறவைகள் விடியலில் பேசிக்கொண்டது பற்றி கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண்புலவர் குறிப்பிடுகிறார்.


இதனை வலியன்-குருவி எனப் பெரும்பாலோர் கூறுகின்றனர். வலியன் குருவிக்குப் பரத்துவாசப் பறவை என்னும் பெயரும் உண்டு என்பர். முனிவர் பரத்துவாசர் எண்ணம் பரத்திலே வாழ்ந்துகொண்டிருந்தது. அதனால் அவருக்கு அப்பெயர் அமைந்தது. இந்த முனிவர் இந்தப் பறவை உருவில் இருந்தவராம்.


இது செம்போத்துப் பறவை என்பாரும் உளர். செம்போத்து என்பது காக்கையை விடச் சற்றே பெரிதாக இருக்கும். வால்-தோகை அகன்று பலவாக நீளமாக இருக்கும். இது விருந்துவரக் கரையும் காக்கை போலப் பேசும் என்பதை நாட்டுப்புறப் பழம்பாடல் ஒன்று தெரிவிக்கிறது.


கேசவன் (நேர்த்தியான கேசம் கொண்டவன்) வருவதை முன்கூட்டியே ஆனைச்சாத்தன் பறவைகள் பேசிக்கொண்டன என்கிறார் புலவர் ஆண்டாள்.


வெளி இணைப்புகள்

ஆனைச்சாத்தன் – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published.