குருகு பறவை

குருகு என்னும் சொல்லால் உணர்த்தப்படும் பொருள்களில் குருகு என்னும் பறவையும் ஒன்று. இதனைச் சலகப்பாடல்கள் கருங்கால் வெண்குருகு என்னும் தொடரால் குறிப்பிடுகின்றன. பறவை வெள்ளை நிறம். கால்கள் கருநிறம். அமர்ந்திருக்கும்போது சற்றே பசுமை நிறம் கொண்ட குருகு இனமும் உண்டு. இது நீரில் வாழும் உயிரினங்களை உண்ணும்.


கருங்கால் வெண்குருகு


 • குருகின் நிறம் வெள்ளைத் தாமரை போல் இருக்கும்.

 • நிறத்திலும், உருவிலும் பேக்கரும்பு பூவைப் போன்றும் கரும்புப்பூ போன்றும் இருக்கும்.

 • உருவம் மரத்தில் உள்ள தாழம்பூ போல இருக்கும். அது சிறகை விரிக்கும்போது தாழம்பூ விரிவது போல இருக்கும்.

 • குளத்திலும் மேயும்.

 • கடற்கழியில் உள்ள தாழம்புதரில் கூட்டமாக உறங்கும்.

 • மணல்வெளியில் உமணரின் உப்புவண்டி செல்லும் ஓசை கேட்டு, கருநிறக் கால்களை உடைய வெண்ணிறக் குருகு அஞ்சும்.

 • நெய்தல் நிலப் புன்னை மரங்களில் குருகு கூடு கட்டி முட்டையிடும். புன்னை மரக் கிளை வளையும் அளவுக்குக் கூட்டமாகத் தங்கும். புன்னைப் பூக்கள் சிந்தும்படி உந்திப் பறக்கும்.

 • மீன்களை மேயும். மரத்தில் நொங்கும் வௌவால்களையும் விரும்பி உண்ணும். இறால் மீன் இதன் பிடிக்குத் தப்புவதும் உண்டு. நண்டை உண்ணும்.

 • பூழியர் நாட்டில் வெள்ளாடு மேய்வது போல கடற்கானல் பரப்பில் குருகு மேயும்.

 • கொற்கை நகரில் குருகுகள் மேய்ந்தன.

 • வையை ஆற்றுப் பொழிலிலும் மேய்ந்தன.

 • பைதல் வெண்குருகு


 • இதன் சிறகை ‘அணிச்சிறை’ என்றனர்.

 • சிறகை விரிக்காமல் கூம்பி அமர்ந்திருந்தபோது சற்றே பசுமை (பைதல்) நிறம் கொண்டிருந்த வெண்ணிறக் குருகுகளைப் பார்வை வேட்டுவன் காழ் களைந்து பயன்படுத்திக்கொண்டான்.

 • தினை அறுத்த பின்னர் நிற்கும் ‘தினைத்தாள்’ போன்ற இதன் கால்களும் சற்று பசுமையாக இருக்கும்.

 • இது பனைமரத்தில் இருந்துகொண்டு கூட்டுக்கு வரும்படி தன் பெண் துணையை அழைக்கும்.

 • குருகு பற்றிச் சங்கப்பாடல் தரும் செய்திகள்


 • குருகின் ஒலி யானை எழுப்பும் ஒலி போல் இருக்கும்.

 • யாழ் இசை போல ஒலி எழுப்பும்.

 • இதன் ஒலியைத் தமிழில் ‘நரலல்’ என்பர்.

 • வயலில் எழும் இதன் கூட்டொலியை ‘இமிழல்’ என்பர்.

 • துணையைப் பிரிந்த குருகு இரவில் குரல் எழுப்பும்.

 • நீர்ப்பரப்புப் பகுதிகளில் வாழும்.

 • வானில் பறக்கும். பறக்கும்போது வரிசையாகப் பறக்கும்.

 • வெயில் தணிந்திருக்கும் மாலை வேளையில் இவை வானில் பறந்து தன் இருப்பிடமான குன்றுகளுக்குச் செல்லும்.

 • பனிக்கு நடுங்கும்.

 • அரசர்களின் படைவீரர்களைப் போல அவை மணல் பரப்பில் வந்து தங்கும்.

 • ஞாழல் மரத்தில் தனித்திருக்கும் குருகுகள் உறங்குவது வழக்கம். மருத மரத்தில் கூட்டமாகத் தங்கும்.

 • உப்பங்கழியில் கூட்டமாக மேயும். நெய்தல் பூக்களை மிதித்துக்கொண்டு மேயும். நெய்தலுக்கு அடியில் மீனைத் தேடும்.

 • புன்னை மரத்திலும் தாழை மடலிலும் கூடு கட்டிக்கொண்டு இறைகொள்ளும் (தங்கியிருக்கும்).

 • ஈங்கை மரத்துத் தளிர் வருட இனிமையாக உறங்கும்.

 • பனம்பழம் விழும் ஒலி கேட்டுக் குருகு இனம் கூட்டமாகப் பறக்கும்.

 • பனை மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழும் குருகு நள்ளிரவு யாமத்தில் குரல் எழுப்புவது உண்டு. குருகு அமர்ந்ததும் பனம்பழம்பழம் வீழும்

 • குருகும் மக்களும்


 • உமணரின் உப்புப் பண்ணையை வீணாக்கும் குருகுகளும் உண்டு.

 • வலையில் பிடித்த மீனை வலை-வேட்டுவர் சிறகு வலுவிழந்த பறவைகளுக்கு இரையாகப் போடுவர்.

 • மருத நிலத்து மனைகளில் மீன் சீவும் மரத்தில் இருந்துகொண்டு குருகுப் பறவைகள் ஒலி எழுப்பும்.

 • அவல் இடிக்கும் உலக்கை ஒலி கேட்டு அருகில் வாழைமரத்தில் இருந்த குருகு பறந்து சென்று மாமரத்தில் அமர்ந்து தன் இறகுகளைக் கோதிக்கொள்ளும்.

 • குருகு உண்ட ஆமை ஓடுகளைப் பயன்படுத்தி ‘பறை’ என்னும் இசைக்கருவி செய்துகொள்வர்.

 • மகளிர் வளையல் அணியாத வெறுங்கையால் விளைந்த நெல் வயலில் மேயும் நாரையையும், குருகையும் ஓட்டுவர்.

 • சிறுமியர் குருகினம் நிரல் வரிசையில் பறக்கும்போது அதனை எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு விளையாடுவர்.

 • வயலில் மேயும் குருகுகளைத் துரத்துவதும் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று.

 • வெளி இணைப்புகள்

  குருகு பறவை – விக்கிப்பீடியா

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.