செங்குருகு (Cinnamon Bittern – Ixobrychus cinnamomeus) தொல்லுலக குருகு வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை ஆகும். சீனா, இந்தியா, இந்தோனேசியா, தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் பரவியுள்ளது. பொதுவில் ஓரிடப் பறவையான செங்குருகு, சில பகுதிகளில் சிறிய தொலைவு பறந்து சென்றும் இனப்பெருக்கம் செய்யவல்லது. இதன் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழல்பகுதிகள் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆகியவை ஆகும்.
தோற்ற அமைப்பு
குட்டையான கழுத்தும் நீண்ட அலகும் கொண்டது; 38 செமீ நீளம், 90 கிராமிலிருந்து 165 கிராம் எடை கொண்டு மடையானை விட சிறியதாவும் மெல்லியதாகவும் இருக்கும்.
ஆண் பறவை: பெரும்பாலும் செம்மண் நிறமுடையது; மார்பின் மேல் பகுதி கருப்பாக இருக்கும்.
பெண் பறவை: பின் பகுதி புள்ளிகளுடன் மார்புப் பகுதி செம்பழுப்பு கோடுகள் கொண்டது
உணவு
இதன் உணவு வகைகள் நீரில் வாழும் பூச்சி, புழுக்கள் போன்றவையாகும்.