பின் தூக்கணாங்குருவி (புளோசியசு மெகரைங்கசு), மேலும் மஞ்சள் நெசவாளர் என அழைக்கப்படுவது தூக்கணாங்குருவி இனங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் நேபாளத்திலும் காணப்படுகின்றன. இரண்டு இனங்கள் அறியப்படுகின்றன. இவற்றில் ஒன்று குமாவோன் பகுதியிலிருந்தும் மற்றொன்று சலிமலீ கிழக்கு தெராயிலிருந்தும் அறியப்படுகிறது.
நைனிடாலுக்கு அருகிலுள்ள கலதுங்கியில் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இந்த இனத்திற்கு ஹியூம் பெயரிட்டார். பிராங் பின் இந்த இன பறவையினை கல்கத்தாவுக்கு அருகிலுள்ள தெராய் பகுதியில் மீண்டும் கண்டுபிடித்தார். 1889ல் ஓட்ஸ் இதைக் கிழக்கு தூக்கணாங்குருவி என்றும், ஸ்டூவர்ட் பேக்கர் பிரிட்டிஷ் இந்தியாவின் விலங்கினங்களின் இரண்டாவது பதிப்பில் (1925) பின் தூக்கணாங்குருவி என்றும் அழைத்தார்.
சூழலியல்
இவை மே முதல் செப்டம்பர் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. கூடுகளை மரங்களின் மேல் அல்லது நாணல்களில் கட்டுகின்றன. இந்தியாவில் காணப்படும் தூக்கணாங்குருவியின் கூடு மற்ற இனங்களிலிருந்து வேறுபட்டது. இவை மற தூக்கணாங்குருவிகளைப் போலவே, இலைகள் மற்றும் நாணல்களின் மெல்லிய கீற்றுகளைக் கொண்டு நெய்கின்றன. இவை கூட்டின் உட்புறத்தில் வசிக்கின்றன. ஆண்கள் மரத்தின் இலைகளை அகற்றி, கூடுகள் தெளிவாகத் தெரியுமாறு அமைக்கும்.