கூந்தல் மனுக்கோடியா பறவை

கூந்தல் மனுக்கோடியா (Manucodia ater) என்பது நடுத்தர அளவான, அதாவது கிட்டத்தட்ட 42 செமீ நீளமான, ஒளிர் பச்சை, நீலம் மற்றும் கருவூதா நிறமான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இதன் கண்கள் செந்நிறமாயும் சொண்டு கருமையாயும் இருப்பதுடன் வால் நன்கு நீளமாயும் மார்பின் மேற்புறமாயும் கழுத்திலும் காணப்படும் இறகுகள் நீண்டு வளர்ந்தும் காணப்படும். கூந்தல் மனுக்கோடியாப் பறவைகளின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும், பெண் பறவையானது ஆண் பறவையிலும் ஒப்பீட்டளவிற் சிறியதாக இருக்கும்.


உருவமைப்பில் கூந்தல் மனுக்கோடியாக்கள் மென் தோள் மனுக்கோடியா மற்றும் யாப்பென் மனுக்கோடியா என்பவற்றை ஒத்தனவாயும் அவற்றிலிருந்து வேறு பிரித்தறிவதற்கு மிகக் கடினமானவையாயும் காணப்படும். இவ்வினம் நியூகினி மற்றும் அண்டிய தீவுகளின் தாழ்நிலக் காடுகளில் பெரிதும் பரவிக் காணப்படுகிறது. இதன் முதன்மையான உணவுகளில் பழங்கள், அத்தி வகைகள் மற்றும் பூச்சிகள் என்பன அடங்கும்.


பிரெஞ்சு இயற்கையியலறிஞர் ரெனே பிரிமெவெரே லெசன் என்பாரினாற் கண்டறியப்பட்ட சந்திரவாசிப் பறவையினங்களில் கூந்தல் மனுக்கோடியா முதலாவதானதாகும். அவரே சந்திரவாசிப் பறவையினமொன்றை உயிருடன் கண்ட முதலாவது மேற்கத்தியராவார்.


நியூகினித் தீவு மற்றும் அண்டிய பகுதிகளுக்கு வெளியே இப்பறவையினத்தின் வளர்க்கப்படும் பறவையொன்று சான் டியகோ விலங்கினக் காட்சியகத்தில் மாத்திரமே உள்ளது.


வெளி இணைப்புகள்

கூந்தல் மனுக்கோடியா – விக்கிப்பீடியா

Glossy-mantled manucode – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.