இமயமலை சின்னான் அல்லது இமயமலை கொண்டைக் குலாத்தி (Himalayan bulbul (Pycnonotus leucogenys) என்பது ஒரு வகை சின்னான் பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்தின் சில பகுதிகளிலும், ஆப்கானித்தான், பூட்டான், நேபாளம், பாகித்தான், தாசிகித்தான், பக்ரைன் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இப்பறவை பக்ரைன் நாட்டின் தேசியப் பறவையாகும்.
விளக்கம்
இப்பறவையின் கன்னம் வெள்ளையாகவும், மீசை இன்றியும், வாலின் அடியில் பிற சின்னான்களைப் போல சிவப்பு நிறத்துக்கு பதில் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.