கருஞ்சிட்டு அல்லது இந்திய ராபின் (Indian robin) என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியப் பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை பொதுவாகக் கிராமப்புறங்களில் காணப்படும். பாதையோரப் புதர்களிலும், கற்களிலும் அமர்ந்துகொண்டு வாலை ஆட்டியபடி இருக்கும்.
விளக்கம்
இப்பறவைகளில் ஆண் பறவை தவிட்டு நிறமும் ஒளிரும் கறுப்பு நிறமும் கொண்டது இதன் வாலின் அடிப்புறத்தில் செந்தவிட்டு நிறம் இருக்கும. பெண்பறவை சாம்பல் கலந்த தவிட்டு நிறமுடையது. செந்தவிட்டு நிற வாலடிப்புறத்தை உடையது.