சாவுக் குருவி அல்லது சின்னப்பக்கி (Indian nightjar (Caprimulgus asiaticus) என்பது இரவில் இரை தேடும் பறவையாகும்.
விளக்கம்
இது மைனாவின் பருமன் இருக்கும். இதன் இறகுகள் ஆந்தையின் நிறத்தை ஒத்து இருக்கும். தரையில் இக்குருவி படுத்துவிட்டால் தரையின் நிறத்துடன் ஒன்றிவிடும். இதன் கால்கள் குட்டையாகவும், வலுவற்றதாக இருந்தாலும், இதன் வாய் அகலமாக அமைந்திருக்கும். இதனால் பூச்சிகளை வாயால் பிடிக்க நல்ல வசதி. இதன் முக்கிய உணவு பூச்சிகள் ஆகும்.
வெளி இணைப்புகள்
சாவுக் குருவி – விக்கிப்பீடியா