தடும்ப நாரை

சிறிய பூநாரை அல்லது தடும்ப நாரை (Lesser Flamingo; Phoeniconaias minor) இப்பறவை ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் அதிகமாக காணப்பட்டாலும் இவை இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த பறவை ஆகும். இப்பறவை பூநாரை இனத்தைச் சார்ந்தது ஆகும். மேலும் இப்பறவை உலகில் பல பகுதிகளிலும் காணப்படுகிறது. நாடோடி திரிதலில் இப்பறவை தனித்துவமாக சுற்றிவரும் தன்மை கொண்டதாக உள்ளது. 2014 ஆம் ஆண்டு வரை பூநாரை வகையானது என்று கருதப்பட்ட இப்பறவை தற்சமயம் சிறிய பூநாரை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


பண்புகள்


பறவைகள் வகைகளில் இவை தோற்றத்தில் பெரியதாகத்தோன்றினாலும் இவை சிறிய நாரை வகைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பறவையின் எடை 1.2 கிலோ முதல் 2.7 கிலோ வரை உள்ளது. இதன் நீளம் தோகை விரிந்த நிலையில் 90 முதல் 105 செமீ கொண்டதாக உள்ளது. பொதுவாக இவ்வகை நாரைகள் இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காணப்படுகிறது. பெரும் பூநாரையிடமிருந்து இதனை பிரிப்பது இதன் அலகுப்பகுதில் காணப்படும் அதிகப்படியான கருப்பு நிறம் ஆகும். மேலும் இவைகளின் உயரம் சற்று குறைவாக உள்ளது. சிறிய நாரைகள் பெரிய வகையான கொக்குகள், இந்தியப் பாலைவனப் பூனை, குரங்குகள் போன்றவற்றால் மோசமாக அழிவுக்குள்ளாகிறது.


படக்காட்சி

வெளி இணைப்புகள்

தடும்ப நாரை – விக்கிப்பீடியா

Lesser flamingo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.