பட்டாணி உப்புக்கொத்தி

பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover – Charadrius dubius) என்பது ஒரு சிறிய உப்புக்கொத்தி பறவை. கண்ணைச்சுற்றி காணப்படும் மஞ்சள் வளையம் இப்பறவையின் ஓர் முக்கிய அடையாளம் ஆகும்.


உடலமைப்பு


 • சாம்பல்-பழுப்பு கலந்த நிறத்தில் பின்புறமும் இறக்கைத் தொகுதியும் கொண்டது; வெண்ணிற மார்பும் கழுத்தைச் சுற்றி ஒரு கரும்பட்டையும் உண்டு. இரண்டாகப் பிரியும் கரும்பட்டைகள் நெற்றியில் காணப்படும்.

 • இது காடையைவிடச் சிறிய பறவை. இதன் அலகு சிறியதாகவும் தடிமனாகவும் இருக்கும்.

 • ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை.

 • பரவல்


  இந்தியத் துணைக்கண்டம் *முழுவதும் காணப்படும்; இமயமலையிலும் 4000 அடி உயரம் வரை இவை பரவுகின்றன. பட்டாணி உப்புக்கொத்தியின் ஒரு இனமான C. d. curonicus ஐரோப்பாவிலிருந்து பனிக்காலத்தில் வலசையாக வருகின்றது எனவும் இன்னொரு இனமான


  C. d. jerdoni இந்தியாவிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது எனவும் சலீம் அலி கருதுகிறார்.


 • குளக்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் இவற்றைக் காணலாம்.

 • கள இயல்புகள்


  வெளி இணைப்புகள்

  பட்டாணி உப்புக்கொத்தி – விக்கிப்பீடியா

  Little ringed plover – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.