சீகார்ப் பூங்குருவி (Malabar whistling thrush) அல்லது அக்காக்குருவி, மலபார் விசிலடிச்சான் என்பது ஒரு பறவையாகும். இது இந்தியத் தீபகற்பத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் , மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது.
விளக்கம்
இப்பறவை மிக அழகான பறவையாகும். இது மைனாவைவிடப் பெரியதாகவும், புறாவைவிட சற்று சிறியதாகவும் காணப்படும். இதன் உடல் நிறம் மயில் நீலநிறத்தில் இருக்கும். இதனுடைய அலகும், கால்களும் கரிய நிறம் கொண்டன.