நீலகிரி பூங்குருவி

நீலகிரி பூங்குருவி (Nilgiri thrush)(சூத்திரா நீல்கெரியென்சிசு) பாடும் பறவைகள் குடும்பத்தினைச் சார்ந்த ஒரு உறுப்பினர்.


விநியோகம் மற்றும் வாழ்விடம்


நீலகிரி பூங்குருவி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணக்கூடியது. இது பெரும்பாலும் சோலைக்காடுகள், மலைப்பகுதிகளில் காணப்படும் மாண்டேன் புல்வெளிகளால் தனிமைப்படுத்தப்பட்ட மேகக் காடுகளில் காணப்படுகின்றன. மழை நாட்களில் சாலைகளில் அரிதாகவே காணப்படுகிறது. இது பூச்சிகளை உணவாக உண்ணுகிறது. ஈரப்பதமான சோலைக்காடுகளின் தங்கியிருக்கிறது. இந்த இனம் காடுகளின் நிலப்பரப்பில் உருமறைப்பின் காரணமாகப் பாதுகாப்பினைப் பெறுகிறது.


விளக்கம்


பாலின வேறுபாடுகள் காணப்படுவதில்லை. உடல் நீளம் 27 முதல் 31 செ.மீ. நீளமானது. வெள்ளை அல்லது மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு செதில்களுடன் காணப்படும். இது பறக்கும் போது குறிப்பிடத்தக்க அடையாள அம்சமாக வெள்ளை நிற அடி இறகில் கருப்பு பட்டை காணப்படும். இது சைபீரிய பாடும் பறவையுடன் பகிரப்பட்ட பண்பாகும். ஆணு பறவை தனக்கென ஒரு பாடலைக் கொண்டுள்ளது. இது சத்தமாக, தூரத்திற்குச் செல்லும் விசில் சத்தமாகும். நீண்ட சொற்றொடருக்கு இடையில் ஒவ்வொரு விநாடிக்கும் இடையே 5-10 வினாடிகள் இடைநிறுத்தப்படுகின்றன ட்வீ … டுவு …. டுவு …. டுவு .


இது முன்னர் செதில் பாடும் பறவையின் துணையினமாகக் கருதப்பட்டது.


வெளி இணைப்புகள்

நீலகிரி பூங்குருவி – விக்கிப்பீடியா

Nilgiri thrush – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.