சின்ன வானம்பாடி

கிழக்கத்திய வானம்பாடி (அலொட குல்குலா), சின்ன வானம்பாடி (Oriental skylark) என்று அழைக்கப்படும் வானம்பாடி இனம், தெற்கு மத்திய மற்றும் கிழக்கு பேலியார்டிக் பகுதிகளில் காணப்படுகிறது. மற்ற வானம்பாடிகளைப் போலவே, இது புல்வெளியில் காணப்படுகிறது. புல்வெளிகளில் காணப்படும் விதைகள் மற்றும் பூச்சிகளை இவை உண்கிறது.


வகைபிரித்தல் மற்றும் முறையானது


கிழக்கத்திய வானம்பாடியை 1831ஆம் ஆண்டில் ஆங்கில சிப்பாயும் இயற்கை ஆர்வலருமான ஜேம்ஸ் பிராங்க்ளின் விவரித்தார். இவர் இதற்கு அலாடா குல்குலா என இருசொற் பெயரினை இட்டார். குல்குலா எனும் சிற்றினப் பெயருக்கு பொருள் ஏதும் இல்லை எனினும் குலா என்பது இலத்தீன் பாடல் ஒன்றினையும் “தொண்டை” என்பதைக் குறிக்கும்.


கிழக்கத்திய வானம்பாடியின் பிற பெயர்கள் கிழக்கு வானம்பாடி, இந்திய வானம்பாடி மற்றும் சிறிய வானம்பாடி ஆகும்.


துணையினங்கள்


பதின்மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:


 • காசுமீர் வானம்பாடி (அ. கு. ஹாமரம் ) அல்லது காஷ்மீர் சிறிய வானம்பாடி – மீனெர்ட்ஷாகன், ஆர் & மீனெர்ட்ஷாகன், ஏ, 1926 : பாமிர் மலைகள் மற்றும் மேற்கு இமயமலையில் காணப்படுகிறது

 • அ. கு. இனோபிண்டா – பியாஞ்சி, 1905 : திபெத்திய பீடபூமி மற்றும் வடமேற்கு சீனாவில் காணப்படுகிறது

 • அ. கு. வெர்னாய் – மாயர், 1941 : கிழக்கு இமயமலை மற்றும் தென்மேற்கு சீனாவில் காணப்படுகிறது

 • மேற்கு ஓரியண்டல் வானம்பாடி (அ. கு. இன்கான்சுபிகுவா) அல்லது துர்கெஸ்தான் சிறிய வானம்பாடி – செவர்ட்சோவ், 1873 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. தெற்கு கசக்கஸ்தானில் இருந்து கிழக்கு ஈரான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா வரை காணப்படுகிறது

 • அ. கு. குல்குலா – பிராங்க்ளின், 1831 : வட-மத்திய இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் கிழக்கிலிருந்து வடக்கு இந்தோசீனா

 • அ. கு.. தர்மகுமார்சங்ஜி – அப்துலி, 1976 : மேற்கு-மத்திய இந்தியாவில் காணப்படுகிறது

 • அ. கு.. ஆஸ்ட்ராலிசு – ப்ரூக்சு, 1873 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. தென்மேற்கு இந்தியாவில் காணப்படுகிறது

 • அ. கு. வெயிகோல்டி ஹேர்டெர்ட், 1922: மத்திய மற்றும் கிழக்கு சீனாவில் உள்ளன

 • அ. கு. கோலிவாக்சு – ஆர். ஸ்வின்ஹோ, 1859 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. தெற்கு மற்றும் தென்கிழக்கு சீனாவில், வடக்கு வியட்நாமில் காணப்படுகிறது

 • அ. கு.சலா – ஆர். ஸ்வின்ஹோ, 1870 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. ஹைனன் தீவில் (தென்கிழக்கு சீனாவிலிருந்து) காணப்படுகிறது

 • அ. கு.ஹெர்பெர்டி – ஹார்டர்ட், 1923 : மத்திய மற்றும் கிழக்கு தாய்லாந்திலிருந்து தெற்கு வியட்நாம் வரை

 • அ. கு.வாட்டர்சி – ஆர். ஸ்வின்ஹோ, 1871 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. தைவானில் காணப்படுகிறது

 • அ. கு. ஒல்பெய் – ஹேச்சிசுகா, 1930: லுசான் (வடக்கு பிலிப்பைன்ஸ்)

 • விளக்கம்


  கிழக்கத்திய வானம்பாடி சுமார் 16 நீளம் உடையது. வெள்ளை வெளிப்புற வால் இறகுகள் மற்றும் ஒரு குறுகிய முகடு ஆகியவற்றைக் கொண்ட, மஞ்சள்-பழுப்பு நிற மேல் சிறகமைப்பினைக் கொண்டது . பாலின வேறுபாடு காணப்படுவதில்லை.


  நடத்தை மற்றும் சூழலியல்


  இந்த வானம்பாடி அடிக்கடி வானத்தில் உயரமாகப் பறக்கின்றன. கீழிறங்கும் முன் ஓசை எழுப்பும். ஆண் கிழக்கத்திய வானம்பாடி துணையை ஈர்க்கும் பொருட்டு ஆகாயத்தில் சுற்றவும் பாடவும் செய்யும்.


  வெளி இணைப்புகள்

  சின்ன வானம்பாடி – விக்கிப்பீடியா

  Oriental skylark – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.