ரூபஸ் தி ஹாக்

ரூபஸ் (Rufus The Hawk) என்பது இங்கிலாந்தில் நடைபெறும் உலகின் பழமையான டென்னிஸ் போட்டியான விம்பில்டன் போட்டிகளின் பொழுது புறாக்களை விரட்ட பயன்படுத்தப்படும் பாறின் பெயராகும். விம்பில்டன் போட்டிகள் மட்டுமே இன்றும் புல்தரைகளில் விளையாடப்படுகிறது. புல்தரைகளில் புறாக்கள் வந்து அமர்ந்தால் அவற்றை பயங்கொள்ளச் செய்து விரட்ட ரூபஸ் பயன்படுத்தப்படுகிறது.


ரூபஸ் பாறு இந்த வேலையே கடந்த பதினைந்து வருடங்களாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பருந்து 2012 ஒலிம்பிக் போட்டிகளின் பொழுதும் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்பட்டது. ருபுஸ் பாறுக்கு முகநூல் மற்றும் டுட்டர் தளத்தில் கணக்குகள் உள்ளன.


விம்பில்டன் போட்டி நிர்வாகத்தினர் ருபுஸுக்கு புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அட்டை வழங்கியுள்ளனர். அடையாள அட்டையில் ருபஸின் பணி பறவைகளை விரட்டுபவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்

ரூபஸ் தி ஹாக் – விக்கிப்பீடியா

Rufus the Hawk – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.