இராசாளி (shaheen falcon (Falco peregrinus peregrinator) என்பது ஒரு பருந்து ஆகும். இது இந்திய துணைக்கண்டத்திலும் அருகில் உள்ள இலங்கையிலும் காணப்படுகிறது.
விளக்கம்
இது ஒரு வலு உள்ள பறவையாகும். தோள் அகன்று, உடலின் மேல்பாகம் கருஞ்சாம்பல் நிறத்திலும், தலை கருப்பாகவும், அடிப்பாகம் வெள்ளையும், செந்தூர நிறம் கலந்தும் காணப்படும். இது அண்டங்காக்கையின் பருமன் இருக்கும். பெண் பறவைகள் ஆணைவிட பெரியதாக இருக்கும். இப்பறவைகள் பெரும்பாலும் மலைசார்ந்த பகுதிகளில் காணப்படுகிறது. மனிதன் ஏறமுடியாத மலை உச்சியில் தன் கூடுகளை கட்டுகிறது.