குறுவாற் பராடிகல்லா பறவை

குறுவாற் பராடிகல்லா (Paradigalla brevicauda) என்பது நடுத்தர அளவிலான, அதாவது கிட்டத்தட்ட 23 செமீ நீளமான அடர்ந்த, கருநிற இறகுகளைக் கொண்ட சந்திரவாசி இனங்களைச் சேர்ந்த பறவையினம் ஒன்றாகும். இது மெல்லிய சொண்டையும் கண்களுக்கு முன்பாக பிரகாசமான மஞ்சள் மற்றும் நீல நிறங்களிலான தொங்கு சதையையும் கொண்டிருக்கும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பிற் பெரும்பாலும் ஒத்திருப்பினும் பெண் பறவையானது ஆண் பறவையிலும் ஒப்பீட்டளவிற் சிறியதாயும், இறகுகள் நிறம் மங்கியனவாயும் தொங்கு சதைகள் சிறியனவாயும் இருக்கும்.


குறுவாற் பராடிகல்லா இனமானது அதனை ஒத்த இனமான நெடுவாற் பராடிகல்லா பறவையினத்திலிருந்து வேறுபடுவது இதன் சிறிய பருமன், ஒப்பீட்டளவிற் சிறியதான வாலிறகுகள் மற்றும் தொங்கு சதையில் செந்நிறமற்றிருப்பது என்பவற்றிலாகும். இப்பறவையினம் தனியொரு பறவையுடன் மாத்திரமே கலவியில் ஈடுபடுவதாக முன்னர் கருதப்பட்ட போதிலும், இவ்வினத்தின் பல பறவைகளுடனும் கலவியில் ஈடுபடுவதாக இப்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பறவையினம் நியூகினித் தீவின் மலைசார் காடுகளிற் பரவிக் காணப்படும். இதன் முதன்மையான உணவுகள் பழங்களும் விதைகளும் பூச்சிகளுமாகும்.


வெளி இணைப்புகள்

குறுவாற் பராடிகல்லா – விக்கிப்பீடியா

Short-tailed paradigalla – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.