திக்கெல் நீல ஈப்பிடிப்பான்

திக்கெல் நீல ஈப்பிடிப்பான் (Tickell’s blue flycatcher) (சையோரினிசு டிக்கெல்லியே) என்பது குருவி வகைகளுள் சிறிய பறவையாகும். இது பெசாரிபார்மிசு வரிசையினைச் சார்ந்த பறவையாகும். இது பூச்சிகளை உண்ணும் பறவையாகும். திக்கெல் நீல ஈப்பிடிப்பான் வெப்பமண்டல ஆசியாவில், இந்தியத் துணைக் கண்டம் முதல் கிழக்கு நோக்கி வங்காளதேசம் மற்றும் மேற்கு மியான்மர் வரையும் காணப்படுகிறது. இந்தோனேசிய நீல ஈப்பிடிப்பான் இதனுடைய இணை இனமாக முன்னர் கருதப்பட்டது. இந்த குருவியின் மேற்புறம் நீல நிறத்திலும் தொண்டை மற்றும் மார்பகம் பழுப்புச்சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை அடர்த்தியான புதர் மற்றும் காடுகளில் காணப்படுகின்றன.


இந்தியா மற்றும் மியன்மரில் பறவைகள் சேகரித்த இங்கிலாந்து பறவையியலாளர் சாமுவேல் டிக்கெல்லை நினைவுபடுத்தும் விதமாக இதற்குப் பெயரிடப்பட்டது.


விளக்கம்


திக்கெல் நீல ஈப்பிடிப்பானின் மொத்த நீளம் சுமார் 11 முதல் 12 செ.மீ. ஆகும். இது நிமிர்ந்து உட்காரும். ஆணின் மேல் பாகங்கள் பிரகாசமான நீலமாகவும், தொண்டை மற்றும் மார்பகம் சிவப்பு வண்ணத்திலும் மற்றும் அடிப்பகுதிகள் வெண்மையாகவும் காணப்படும். பெண் பிரகாசமான நீல புருவம், தோள்பட்டை, பின் தொடை மற்றும் வால் நீல நிறத்திலும் இருக்கும். இது இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் வெளிர்-கன்னம் கொண்ட நீல ஈப்பிடிப்பானுடன் (சியோர்னிஸ் போலியோஜெனிசு) இனக்கலப்பு செய்து தோன்றிய துணை சிற்றினம் வெர்னாய் என்று அழைக்கப்படுகின்றது. இளம் குருவிகள் கோடுகளுடையன. புள்ளிகள் கொண்ட கவசமும், பழுப்பு நிற செதில்கள் மேற்புறம், தலை மற்றும் மார்பகங்களில் காணப்படும். இறக்கைகளும் வாலும் நீல நிறத்தில் உள்ளன.


சில நேரங்களில் சாயங்காலத்திற்குப் பிறகும் உணவைத் தேடுகின்றன. பறக்கும் பூச்சிகளைத் தவிர, அவ்வப்போது ஊர்ந்து செல்லும் பூச்சிகளையும் இவை உண்ணும்.


இறக்கை அமைப்புகளில் பிராந்திய வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே இவை கிளையினங்களாக அறியப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட பெயருடைய துணையினங்கள் இந்தியா, நேபாளம் மற்றும் மியான்மரில் காணப்படுகிறது. இலங்கை துணையினம் ஜெர்டோனி (அல்லது நெசியா/மெசியா என்றாள் இருள்) அறியப்படுகிறது.


கடந்த காலங்களில் இந்த இனம் நீல-தொண்டை நீல ஈப்பிடிப்பான் (சியோர்னிசு ருபிகுலாய்டெசு) நீல தொண்டைக் கொண்டதால், துணையினமாகக் கருதப்பட்டது.


வாழ்விடமும் பரவலும்


திக்கெல் நீல ஈப்பிடிப்பான் வறண்ட காடு, புதர், மூங்கில் மற்றும் தோட்டங்களில் இனப்பெருக்கம் செய்கிறது.


நடத்தை மற்றும் சூழலியல்


இவை இனிமையான ஒலி எழுப்பக்கூடியவை. மேலும் எச்சரிக்கை அழைப்பினையும் தோற்றுவிக்கக் கூடியன. இதன் ஒலி மூலம் எளிதாக இவற்றைக் கண்டுபிடிக்கலாம். இவை காடுகளை நேசிக்கும் இனமாகும். அடர்த்தியான காடுகளில் இவை காணப்படும். குறிப்பாக நீரோடைகளின் கரைகளில் உள்ள மரங்களில் காணப்படும்.


இவை முக்கியமாகப் பூச்சிகளைப் பறந்து பூச்சிகளைப் பிடித்து உணவாக உண்ணுகின்றன. இவற்றின் இரையில் கறையான்கள் மற்றும் விட்டில்பூச்சிகள் போன்ற பிற பூச்சிகளும் அடங்கும். இப்போது இவை குப்பை இடங்களில் வசிப்பதை அவதானித்து வருகின்றனர். இனப்பெருக்க காலத்தில், சிறிய முதுகெலும்புகள் உட்படப் பெரிய இரையை எடுக்கக்கூடும். இலங்கையில் ஒரு புதர் தவளை இதன் இரையாக அறியப்பட்டுள்ளது.


இனப்பெருக்க காலம் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை (இலங்கையில் மார்ச் முதல் ஜூன் வரை). இது மரத்தின் துளை அல்லது பாறைகளுக்கு இடையில் புல் மற்றும் இழைகளை நன்கு அடுக்குகளாக அமைத்து 3 முதல் 5 முட்டைகள் வரை இடும்.


வெளி இணைப்புகள்

திக்கெல் நீல ஈப்பிடிப்பான் – விக்கிப்பீடியா

Tickell’s blue flycatcher – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.