கருந்தலைச் சில்லை 10 செ.மீ., தலை கருப்பு, எஞ்சிய உடலின் மேற்பகுதி செம்பழுப்பு பிட்டம் மேலும் சற்றுக் கூடுதலாகப் பழுப்பாக இருக்கும். தொண்டை, மார்பு, வயிற்றின் நடுப்பகுதி, வாலடி தொடை ஆகியன கருப்பு மார்பின் பக்கங்கள் வெண்மை.
உணவு
நெல் வயல்களை அடுத்த நீர் தேங்கியுள்ள இடங்களில் புல்விதைகளையும் நெல்லையும் இரை தேடியபடி இருக்கும். புள்ளிச் சில்லை கூட்டத்துடன் சேர்ந்து இரை தேடும்.
காணப்படும் பகுதிகள்
இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில் 100 வரையான கூட்டமாகக் காணலாம். சதுப்பான நாணற்புதர்கள் கொண்ட நஞ்சை நிலங்களை விரும்பித் திரியும்.
இனப்பெருக்கம்
இது இனப்பெருக்கம் செய்யும் பருவத்தில் கருங்கீற்றுத் தூக்கணாங் குருவிகளுடன் உறவு கொண்டதாக அவை கூடுகட்டத் தொடங்கியவுடன் அக்கூடுகளில் நுழைந்து பார்க்கவும் அவற்றோடு கலந்து பறந்து திரியவும் செய்யும் இங். இங். என மெல்லிய குரல் ஒலி எழுப்பும். அக்டோபர் முதல் மே பந்து வடிவில் கூடமைத்து மென்மையான இளம்புல்லால் மெத்தென்று ஆக்கி 5 முட்டைகள் இடும்.