திரோகன்

திரோகன்களும் (Trogon) குவெத்சல்களும் திரோகனிபார்மசு என்னும் வரிசையில் உள்ள ஒரே குடும்பமான திரோகனிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளாகும். இக்குடும்பத்தில் ஏழு பேரினங்களில் 39 இனங்கள் உள்ளன. இப்பறவைகள் கூடு கட்ட மரத்தைக் கொத்தித் துளையிடுகின்றன. இதனால் கொத்திதல் எனப்பொருள் படும் கிரேக்க மொழிச் சொல்லான திரோகன் என்னும் பெயரால் இப்பறவைகள் அழைக்கப்படுகின்றன.


இப்பறவைகள் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. பூச்சிகளையும் பழங்களையும் உணவாகக் கொள்கின்றன. இவற்றின் உணவுப் பழகத்திற்கு ஏற்றவாறு அலகுகள் அகன்றும் கால்கள் வலிமையற்றும் உள்ளன. இப்பறவைகள் விரைந்து பறக்க வல்லனவாக இருந்தாலும் இவை பறக்க விரும்புவதில்லை. இவற்றின் சிறகுகள் மென்மையாக வண்ணமயமாகவும் உள்ளன. ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் வேறுபட்ட நிறத்தோற்றத்தைக் கொண்டுள்ளன. மரங்களில் உள்ள துளைகளில் கூடு கட்டுகின்றன. 2 முதல் 4 வரை வெள்ளை அல்லது வெளிர் நிற முட்டைகள் இடுகின்றன.


 • திரோகன்கள்

 • திரோகனிபார்மசு

 • வெளி இணைப்புகள்

  திரோகன் – விக்கிப்பீடியா

  Trogon – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.