கொம்பு மனுக்கோடியா பறவை

கொம்பு மனுக்கோடியா (Manucodia keraudrenii) என்பது நடுத்தர அளவிலான, அதாவது கிட்டத்தட்ட 31 செமீ நீளமான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது கொம்புகள் போன்று நீண்டு வளர்ந்த தலையிறகுகளைக் கொண்டதாயும் செறிவு குறைந்த கழுத்திறகுகளைக் கொண்டதாயும் இருக்கும். கருநீலம், பச்சை மற்றும் ஊதா நிறத்தில் இதன் இறகுகள் காணப்படும். செந்நிறக் கண்களையும் நீண்டு வளைந்த மூக்குத் துவாரங்களையும் கருமையான சொண்டு, வாய் மற்றும் கால்களையும் கொண்டிருக்கும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும் பெண் பறவையானது ஆண் பறவையிலும் நிறம் மங்கியதாகக் காணப்படும். இப்பறவைகள் எழுப்பும் ஒலி ஊது கொம்புகள் மூலம் ஒலியெழுப்புவது போன்று மிகப் பெரிதாக ஒலிக்கும்.


கொம்பு மனுக்கோடியாப் பறவைகள் வடகிழக்கு ஆத்திரேலியா, நியூகினித் தீவு மற்றும் அதனை அண்டிய தீவுகளின் தாழ்நில மழைக்காடுகளில் நன்கு பரவிக் காணப்படும். ஏனைய மனுக்கோடியாக்களைப் போன்றே இவ்வினமும் தனியொரு பறவையுடன் மாத்திரம் கலவியில் ஈடுபடும்.


வெளி இணைப்புகள்

கொம்பு மனுக்கோடியா – விக்கிப்பீடியா

Trumpet manucode – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.