வெள்ளைக்கண் வைரி

வெள்ளைக்கண் வைரி (White-eyed Buzzard, Butastur teesa) ஊன் உண்ணிப் பறவையில் வைரி என்ற பிரிவைச்சார்ந்த பறவையாகும். இதன் நடுத்தர உடல்வாகுவைக் கொண்ட இப்பறவையின் குடும்பப்பெயர் அசிப்பிட்ரினே என்பதாகும். இதன் வாழிவிடம் பொதுவாக தெற்கு ஆசியா பகுதியில் அமைந்துள்ள நாடுகள் ஆகும். இப்பறவையில் முதிர்ந்த பறவை சிவந்த நிறத்துடனும், தனித்துவமான வெள்ளை கருவிழியுடன் இதன் தலைப்பகுதி பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது. இப்பறவைகள் இனப்பெருக்க காலங்களில் உயரமாகப் பறந்து தனித்துவமான ஒலி எழுப்பி தனது இணையைக் கவருகிறது. இப்பறவை சிறிய பூச்சிகள் எலிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது.


விவரணை


மெலிதாகவும் வெள்ளை கருவிழிகொண்டும் இப்பறவையை எளிதில் வேறுபடுத்திக் கண்டுவிட முடியும். தலையில் பின்பகுதியில் வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும், சில நேரங்களில் புள்ளிகள் முதுகுப்பகுதி வரை இருக்கும். ஆனால் ரஸ்யா பகுதிகளில் காணப்படும் சாம்பல் முகம் பருந்துக்கும் இதற்கும் குழப்பம் ஏற்படலாம்.


பரவல்


தெற்கு ஆசியாப்பகுதியில் கானப்படும் பறவையாக இருந்தாலும் இமயமலைப் பகுதிகளில் 1000 மீற்றர்களுக்கு மேல் காணப்படுகிறது. மேலும் பாகிஸ்தான், நேபாளம், வங்காளம், மியான்மர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. அந்தமான் மற்றும் இலங்கைப் பகுதிகளில் இப்பறவையைப் பார்க்க முடிவதில்லை. இதன் இனப்பெருக்கத்தை திறந்த காட்டுப்பகுதி, உலர் நிலங்கள் போன்றவற்றில் வைத்துக்கொள்கிறது. ஒரு சில இடங்களில் ஏறாலமாகவும், சில இடங்களில் குறைவாகவும் காணப்படுகிறது. 1950 ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி டெல்லியைச்சுற்றி 50,000 கிலோ மீற்றர்களுக்குள் 5,000 பறவைகள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சூழலியல் மற்றும் நடத்தை


இதன் இனப்பெருக்க காலம் பிப்ரவரி மாதம் துவங்கி மே மாதம் வரை நடக்கிறது. இவை மூன்று முட்டைகள் வரை இட்டு அடை காக்கிறன. இவற்றின் இரு பாலரும் சேர்ந்தே கூட்டைக் கட்டுகிறது. ஆனால் அடைகாக்கும்போது மட்டும் 19 நாட்களுக்கு பென் பறவை மட்டும் கூட்டில் தங்கியிருக்கும். இவற்றிற்கு பிடித்தமான உணவு இந்திய குழிமுயல்கள் ஆகும்.


வெளி இணைப்புகள்

வெள்ளைக்கண் வைரி – விக்கிப்பீடியா

White-eyed buzzard – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.