மலை மூக்கன்

உடலமைப்பு


ஆங்கிலப்பெயர் :Wood-cock


அறிவியல் பெயர் :Scolopax rusticola


36 செ.மீ – குறகிய கால்களை உடைய இதன் பின் தலையும் கழுத்தும் பிட்டமும் கருப்பும் கருஞ்சிவப்புமான குறுக்குக் கோடுகளைக் கொண்டது. உடலின் கீழ்ப்பகுதி முழுதும் வெளிர் பழுப்பு நிறத்தில் பழுப்புக் கோடுகளோடு காணப்படும்.


காணப்படும் பகுதிகள்


குளிர்காலத்தில் கொடைக்கானல், நீலகிரி சார்ந்த மலைகளில் அமைந்த சதுப்புக்காடுகளுக்கு வலசை வரும்.


உணவு


காலை மாலை அந்திகளில் புழு பூச்சிகள் முட்டைப் புழுக்கள், விதைகள், இளந்தளிh; முளைகள் ஆகியவற்றை இரையாகத் தேடி உண்ணும். இது பகலில் மறைவான புதர்களிடையே படுத்துக் கிடக்கும் ஈரமான மண் நிலத்தில் அலகைச் செலுத்தி இரைதேடும். இது ஒரு வட்டாரத்தில் இருப்பதை ஈர மண்ணில் தேன் கூடு போல அடுத்தடுத்து இதன் அலகு பதிந்துள்ள அடையாளம் கொண்டு தெரிந்து கொள்ளலாம். வேகமின்றித் தயங்கித் தயங்கிப் பறந்தாலும் வேட்டைக்காரர்களின் குறிக்கு அகப்படாது. மரங்களிடையே அப்படியும் இப்படியுமாகத் திரும்பிப் பறந்து புதர்களிடையே புகுந்து மறையும்.


வெளி இணைப்புகள்

மலை மூக்கன் – விக்கிப்பீடியா

Woodcock – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.