வெண்கழுத்து நாரை

வெண்கழுத்து நாரை (White-necked Stork) இப்பறவை நாரை வகையைச் சார்ந்த உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படும் பறவை ஆகும். இப்பறவை நாரை வகைகளில் பெரிய தோற்றத்தைக்கொண்டு 88 செமீ உயரம் வரை வளருகிறது. இவை பல ஆண்டு காலமாக உயிர் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. நீண்ட கால் பகுதியும், உருதியான நீண்ட அலகும் கொண்டு, உடல் முழுவதிலும் கருமை நிறமாகவும், கழுத்திற்கு கீழ் பகுதியில் கரும் பச்சை நிறம் கொண்டும் காணப்படுகிறது. ஆனால் தலைக்கு கீழே அமைந்துள்ள கழுத்துப் பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. ஆசியப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இந்தோனேசியா, போன்ற இடங்களிலும், ஆப்பிரிக்காவிலும் காணப்படுகிறது. ஆனாலும் இப்பறவை இந்தியாவின் தென் பகுதி மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த பறவையாகும். இப்பறவையின் கூடுகள் நீர் நிலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடங்கள் ஆகும்.


நடத்தை


வெண்கழுத்து நாரையான இவைகள் மற்ற நாரைகளைப் போல் பறக்கும் போது தன் கழுத்தை நீட்டிக் கொண்டு விமானம் போல் பரக்கிறது. தன் சிறகுகளைக் கொண்டு சூடான காற்றைத் தனக்கு சாதமாக்கி ஈர்த்துக் கொண்டு நீண்ட தூரம் பறந்து செல்கிறது. இரண்டு முதல் ஐந்து முட்டைகளை இடுகிறது.


உணவு


இவை மெதுவாக தரையில் நடக்கும் தன்மை கொண்டது. இவை நீர்நில வாழ்வன, ஊர்வன, பூச்சி போன்றவற்றை உட்கொண்டு வாழ்கிறது.


படக்காட்சிகள்

வெளி இணைப்புகள்

வெண்கழுத்து நாரை – விக்கிப்பீடியா

Woolly-necked stork – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.