பச்சைப்புறா

பச்சைப்புறா (yellow-footed green pigeon, Treron phoenicoptera) என்பது ஓரு பச்சைப் புறா பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. இப்பறவை மகாராட்டிர மாநிலப் பறவையாகும். இப்புறா நாட்டுப்புறா பருமன் உள்ளதாகவும், இதன் உடல் மஞ்சள், ஊதாப்பச்சை, சாம்பல் வெளுப்பு கலந்த நிறமுடையது. இவை காடுகளிலும், பிடித்தமான பழங்கள் உள்ள தோட்டங்களிலும் காணப்படும்.


உடலமைப்பு


33 செ.மீ. – ஆலிவ் தோய்ந்த பச்சைநிற உடலும் மஞ்சள் நிற மாற்பும் வயிறும் கொண்ட இதன் இறகுகள் இளஞ்சிவப்புப் பட்டைகளைக் கொண்டது. கழுத்தில் மஞ்சள் பட்டை உண்டு. கால்கள் மஞ்சள் நிறம். பெண்ணின் உடல் நிறம் சற்று மங்கலானது.


காணப்படும் பகுதிகள்


தமிழகம் எங்கும் இலையுதிர் காடுகளைச் சார்ந்து பழமரங்கள் பழுக்கும் பருவத்திற்கேற்ப இடம் மாறித் திரிவது. வீட்டுத் தோட்டங்கள், சாலை ஓர மரங்கள், தோப்புகள் ஆகியவற்றைச் சார்ந்து 5 முதல் 10 வரையான கூட்டமாகத் திரளக் காணலாம்.


உணவு


பழம் உள்ள சிமிர்களில் கிளிகளைப் போல பக்கவாட்டிலும் தலைகீழாகவும் தொங்கியபடி தூரி ஆடி அருகில் உள்ள சிமிரில் உள்ள பழத்தைக் கவ்வப் பார்க்கும். தொண்டை நிறையப் பழங்களை அடக்கிக் கொள்ளும் பழக்கம் உடையவை. காலையிலும் மாலையிலும் உயரகிளைகளில் துணையோடு அமர்ந்து வெயில்காயும் பழக்கம் கொண்டது.


இனப்பெருக்கம்


மார்ச் முதல் சூன் வரை வெளியே தெரியாதபடி இலைகள் நிறைந்த கிளைகளில் குச்சிகளால் மேலை அமைத்து 2 முட்டைகள் இடும்.


வெளி இணைப்புகள்

பச்சைப்புறா – விக்கிப்பீடியா

Yellow-footed green pigeon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.