ஆண்டியப் பூநாரை

ஆண்டியப் பூநாரை (Phoenicoparrus andinus) உலகின் அரிதான பூநாரை இனங்களில் ஒன்றாகும். இது தென்னமெரிக்காவின் ஆண்டிய மலைத்தொடர்களில் வாழ்கிறது.


தோற்றக்குறிப்பு


இப்பூநாரை வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேற்பகுதி வெளுத்தும் அடிப்பகுதி சற்று அடர்ந்த வெளிர் சிவப்பு நிறத்திலும் இருக்கும். கால்கள் மஞ்சளாகவும் மூன்று விரல்களுள்ள கால்களும் உள்ள ஒரே பூநாரை இனம் இதுவேயாகும். இதன் அலகு வெளிர் மஞ்சளும் கருப்பும் கலந்து காணப்படும்.


தற்கால நிலை


சுரங்கத் தொழிலாலும் மனிதர்களின் இடையூறாலும் இவற்றின் வாழிடம் பாதிக்கப்படுவதால் இப்பூநாரைகள் அழிவாய்ப்புள்ள இனமாகக் கருதப்படுகிறது.


படக்காட்சியகம்

வெளி இணைப்புகள்

ஆண்டியப் பூநாரை – விக்கிப்பீடியா

Andean flamingo – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.